வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வரும் பேரவைத் தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
தேர்தலையொட்டி அவர் தனது தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
Advertisement
Advertisement
இதனால் அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வானதி சீனிவாசனைப் பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து அவரது தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
Coimbatore North constituency BJP candidate Vanathi Srinivasan has been admitted to the hospital.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.