இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர் 
தற்போதைய செய்திகள்

இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர்: மிரள வைக்கும் விடியோ!

இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர் நூலிழையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மிரள வைக்கும் விடியோ

DIN

அரசுப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர் நூலிழையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மிரள வைக்கும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த போது, தாமரங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் தனியார் பேருந்தில் ஏறுவதற்காக கையை காட்டி சாலையைக் கடக்கச் சென்றுள்ளார்.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தவறான முறையில் தனியார் பேருந்தை முந்த முயன்றுள்ளார்.

இதில் தனியார் பேருந்தில் ஏற முயன்ற இளைஞர் பரத் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டவர் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தனியார் பேருந்துக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் வேகமாக வந்து முந்த முயன்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி நூலிழையில் உயிர் தப்பும் விபத்து பதிவான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி, காண்போரை மிரள வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT