FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சாலை விபத்தில் சிக்கிய திருப்பூர் இளைஞர் உடல் உறுப்புகள் தானம்! 3 பேருக்கு மறுவாழ்வு

சாலை விபத்தில் சிக்கிய திருப்பூர் இளைஞர் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டதால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

Updated On : 9 மார்ச் 2026, 11:17 am IST
திருப்பூர் இளைஞர் - DPS
பகிர்:

கோவை : சாலை விபத்தில் இறந்த திருப்பூர் இளைஞர் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் தானமளிக்கப்பட்டதால் 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், விவசாயி. இவரது மனைவி விசாலாட்சி இவர்களுக்கு பாஸ்கரன் (29) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். 

பாஸ்கரன் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்கு உள்ள பேப்பர் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பாஸ்கரனின் தாயார் விசாலாட்சி இறந்து விட்டார். 

Advertisement

Advertisement

அதற்கு 16 ம் நாள் காரியம் நடைபெற இருந்த நிலையில், அதற்காக பொருள்கள் வாங்க பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா, 11 மாத குழந்தை மற்றும் அவரது சகோதரி உள்ளிட்டோர் காரில் உடுமலைப்பேட்டைக்கு சென்றனர். 

அங்கு பொருள்களை வாங்கி விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது வழியில் கார் விபத்தில் சிக்கியது. இதில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் பாஸ்கரன் ஆபத்தான கட்டத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச் சாவு அடைந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அப்போது அவரது குடும்பத்தினர் பாஸ்கரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் மற்றவர்கள் அதன் மூலம் பயன்பெறுவார்கள் என்பதால் அவற்றை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது கண், கல்லீரல், சிறுநீரகம், உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments