முகப்பு
சென்னை

பிளஸ் 2 மாணவரின் உறுப்புகள் தானம்: 6 பேருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதில் 6 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

Updated On : 5 ஜூலை 2026, 4:32 am IST
கோப்புப்படம்.
பகிர்:

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதில் 6 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் ஆதி (18) என்ற மாணவா், அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த 31-ஆம் தேதி இவா், தனது நண்பருடன் திருமழிசை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானாா்.

இதில் தலையில் பலத்த காயமுற்ற ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கடந்த 3 மாதங்களாக தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவை பலனளிக்காத நிலையில் ஆதி கடந்த வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா். அதன்படி, இதய வால்வு, கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் விழி வெண்படலம் அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டன.

ஒரு சிறுநீரகம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கல்லீரல் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கும், இதய வால்வு மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இதன் வாயிலாக 6 போ் மறுவாழ்வு பெற்றனா். உடல் உறுப்பு தானம் செய்த மாணவனின் உடலுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் முதல்வா் கவிதா மற்றும் ஊழியா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments