கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்! 17 வயது மாணவன் கைது!

கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 17 வயது மாணவன் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

DIN

மகா கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிகாரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவனை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா வரும் ஜன. 13-ஆம் தேதி முதல் பிப். 26-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் திவிவெடி (வயது 17) என்ற சிறுவன் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மகா கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளான்.

இதையும் படிக்க: தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500: இது காங்கிரஸின் வாக்குறுதி!

தனது வகுப்பு தோழனுடன் ஏற்பட்ட பிரச்சையினால் அவனைப் பழிவாங்க, தனது தோழனின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கும்பமேளாவில் வெடிகுண்டு வைத்து 1,000 பக்தர்களை கொல்ல போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், அந்த பக்கத்தில் கும்பமேளாவிற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மேள கொட்வாளி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், பிகாரில் அந்த சிறுவனைக் கண்டுபிடித்து அவனைக் கைது செய்து தற்போது சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT