நாட்டில் 3 பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று! படம்: IANS
தற்போதைய செய்திகள்

நாட்டில் 3 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று!

எச்எம்பிவி வைரஸ் தொற்று தொடர்பாக...

DIN

இந்தியாவில் எச்எம்பிவி தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் 2019-இல் பரவிய கரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டது. லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது சீனாவில் மீண்டும் ‘ஹியூமன் மெடாநிமோ வைரஸ்’ என்ற ‘எச்எம்பிவி’ வைரஸ் பரவி வருகிறது.

சீனாவில் பரவிவரும் இந்த ‘எச்எம்பிவி’ வைரஸ் தொற்று, இந்தியாவில் முதன்முறையாக கர்நாடகத்தில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டது.

இதையும் படிக்க: பங்குச் சந்தைகள் சரிவுக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு காரணமா?

முன்னதாக, பெங்களூரில் 3 மாத பெண் குழந்தைக்கும் 8 மாத ஆண் குழந்தைக்கும் ‘எச்எம்பிவி’ வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாத ஆண் குழந்தைக்கும் ‘எச்எம்பிவி’ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூரில் ‘எச்எம்பிவி’ வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஆனால், அகமதாபாத்தில் ‘எச்எம்பிவி’ வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்ட குழந்தை வெளிநாடு பயணம் மேற்கொண்டதா? என்பது குறித்த தகவல் தெரியவில்லை என்று குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ரிஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT