நெல்லையில் ஆம்னி பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து. 
தற்போதைய செய்திகள்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 35 பேர் காயம்!

நெல்லையில் ஆம்னி பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து.

DIN

நெல்லையில் ஆம்னி பேருந்து திடீரென நிலை தடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளனானதில் ஒருவர் பலியாகிய நிலையில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, நாகர்கோவில் நோக்கி இன்று(ஜன. 8) காலை சென்றுக்கொண்டு இருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டது.

இந்த பேருந்தில் 37 பேர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது

ஆம்னி பேருந்து இன்று காலை பாளையங்கோட்டை தனியார் பாலிடெக்னிக் அருகே வரும்போது திடீரென நிலை தடுமாறி பேருந்து கவிழ்ந்தது.

இதையும் படிக்க: தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள், படுகாயம் அடைந்த 35 பேரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம் கூட்டப்புளி லெவிஞ்சிபுரம் பெரிய தெருவைச் சேர்ந்த பிரிஸ்கோ ( 64 ) என்பவர் பலியானார்.

இந்நிலையில், பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஓட்டுநர் திடீரென தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

SCROLL FOR NEXT