கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

யேமன்: வெடி விபத்தில் 15 பேர் பலி! 67 பேர் படுகாயம்!

யேமனில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தைப் பற்றி..

DIN

யேமன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியாகினர்.

அந்நாட்டின், பைடா மாகாணத்தின் ஜாஹர் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 15 பேர் பலியானதுடன் சுமார் 67 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹௌதி போராளிக் குழுவின் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அதில் 40 பேரது நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் காணமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், விபத்து நிகழ்ந்தபோது பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலி

அதில், வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடன் அப்பகுதியில் தீ கொளுந்துவிட்டு எறிவதும், வானமெங்கும் கருநிற புகை சூழ்ந்திருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த மத்திய யேமன் மாகாணத்தை ஈரான் துணையுடைய ஹௌதி போராளி குழு கட்டுப்படுத்தி வருகின்றது. இந்த போராளி குழு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்நாட்டு அரசுடன் உள்நாட்டு போர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

SCROLL FOR NEXT