ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர். 
தற்போதைய செய்திகள்

வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

தனியார் மதுபானக் கூடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலையில் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பழைய திருமண மண்டபத்தில் நவீன வசதிகளுடன் தனியார் மதுபானக் கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனருகே, பள்ளிக் கூடம், தபால் அலுவலகம், ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில், தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் போன்றவை உள்ளன. சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 50-க்கும் அதிகமான கடைகள் உள்ளன.

இதையும் படிக்க: 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

எனவே, பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கவுள்ள மதுபான விற்பனைக் கூடத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மதுபானக் கூடம் அமையவுள்ள கட்டடத்துக்கு முன்புறம் சாலையில் திரண்ட 150 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அரை மணி நேரம் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தைப்பொங்கல் நாளில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT