தற்போதைய செய்திகள்

விரைவில் 'வாடிவாசல்' படப்பிடிப்பு!

விரைவில் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும்.

DIN

விரைவில் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் 'விடுதலை - 2' படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இதனால், 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் 'விடுதலை - 2' வெளியீட்டை முடித்துள்ளதால், 'வாடிவாசல்' திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.

வெற்றி மாறன் இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதையும் படிக்க: தருணம் திரையிடல் நிறுத்திவைப்பு... என்ன காரணம்?

வாடிவாசலில் நாயகியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'வாடிவாசல்' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை உறுதிபடுத்தும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT