முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜய் சேதுபதியின் ஏஸ் கிளிம்ஸ் விடியோ!

ஏஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியீடு.

Updated On : 16 ஜனவரி, 2025 at 1:53 PM
பகிர்:

விஜய் சேதுபதியின் பிறந்த நாளையொட்டி ஏஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது.

தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அவரது 51-வது படம் ஏஸ் (Ace).

இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீட்டுத் தேதி, டிரைலர் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ள ஏஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.