தற்போதைய செய்திகள்

மானை விழுங்கிய மலைப் பாம்பு மீட்பு!

மான் உயிரிழந்த நிலையில், மலைப் பாம்பை உயிருடன் மீட்கப்பட்டது.

DIN

மலைப் பாம்பு ஒன்று மானை விழுங்கிய நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மானை லாவகமாக வெளியேற்றி மலைப் பாம்பை உயிருடன் மீட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள கூடலூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தோட்டத்தில் மலைப் பாம்பு ஒன்று வயிறு பெருத்த நிலையில் நெளிந்தபடி இருந்துள்ளது.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிக்க: பாரத போக்குவரத்துக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், சுரேஷ்குமார் தலைமையில், வெற்றிவேல், வேல்முருகன், மோகன், முகமது அலி மற்றும் ஜுபேர் நாராயணன் ஆகிய 7 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் உயிருடன் இருந்த அந்த மலைப் பாம்பை மீட்டு அது விழுங்கி இருந்த மானை லாவகமாக வெளியேற்றினர்.

பின்னர் உயிருடன் இருந்த அந்த மலைப் பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர். மான் உயிரிழந்த நிலையில், மலைப் பாம்பை உயிருடன் மீட்கப்பட்டது.

மானை விழுங்கிய மலைப் பாம்பைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT