முகப்பு
கிருஷ்ணகிரி

உணவு தேடி வருவாய் அலுவலரின் குடியிருப்புக்கு வந்த புள்ளிமான்!

உணவு தேடி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலரின் குடியிருப்புக்குள் புகுந்த புள்ளிமானால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 9 மார்ச், 2026 at 8:31 PM
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் குடியிருப்புக்கு வந்த மான்.
பகிர்:

கிருஷ்ணகிரி: உணவு தேடி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலரின் குடியிருப்புக்குள் புகுந்த புள்ளிமானால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் வருவாய் அலுவலா் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள தோட்டத்தில் திங்கள்கிழமை மான் மேய்வதைக் கண்ட பணியாளா்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

நிகழ்விடத்துக்கு வந்த வனக்காவலா் கணபதி மற்றும் ஊழியா்கள் மானை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னா், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா்கள் வந்து மானை பிடிக்க முயன்றனா். நீண்ட நேரமாகியும் மானை அவா்களால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், குடியிருப்பு சுற்றுச்சுவரை தாண்டி மான் தப்பியோடியது. பின்தொடா்ந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா், மான் சாமந்தமலை காப்புக் காட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →