dinmani online
தற்போதைய செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு விருது!

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை தேவயானியின் குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது...

DIN

நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ எனும் குறும்படம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை தேவயானி இயக்கிய முதல் குறும்படமான ’கைக்குட்டை ராணி’ , 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் ’சிறந்த குழந்தைகளுக்கான குறும்படம்’ எனும் விருதை வென்றுள்ளது.

நடிகை தேவயானியின் ’டி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், அவர் இயக்கிய இந்த 20 நிமிட குறும்படம், தாயை இழந்த ஒரு சிறுமியின் வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளைப் பற்றிய உணர்ச்சி மிகுந்த கதையைக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: விருதுகளைக் குவித்த ‘தி சீட் ஆப் தி சாக்ரெட் ஃபிக்’ திரைப்படம் இந்தியாவில் வெளியீடு!

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இந்த குறும்படத்தின் படத்தொகுப்பை தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பி. லெனின் கையாண்டுள்ளார். நிஹாரிகா மற்றும் நவீன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ராஜன் மிர்யாலாவின் ஒளிப்பதிவில் இந்த குறும்படம் உருவாகியுள்ளது.

மேலும், குழந்தைகளின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் படமாக்கியுள்ளதாக அந்த விழாவில் ‘கைக்குட்டை ராணி’ படக்குழு பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT