மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ . சண்முகம் DIN
தற்போதைய செய்திகள்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூ. கட்சியும் அறிவிப்பு!

குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

DIN

குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

இந்நிலையில் குடியரசு நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் இன்று காலை அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,

'அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.

ஆகவே, ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

SCROLL FOR NEXT