தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. 
தமிழ்நாடு

ஆளுநர் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

குடியரசு நாளையொட்டி, இன்று(ஜன. 26) மாலை மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழிக அரசு அறிவித்துள்ளது.

மக்கள் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு மற்றும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது ஆளுநர் மாளிகையில், அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அதன்படி, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பார். அதற்கான அழைப்புகளும் விடுக்கப்படும்.

முன்னதாக, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

The Tamil Nadu government has announced that it will boycott the tea party hosted by Tamil Nadu Governor R.N. Ravi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (26-01-2026)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விஜய் நிம்மதியாக அரசியல் செய்யலாம்! - Tamilisai Soundararajan

என் தேசத்திற்கும், மக்களுக்கும் நன்றி: பத்ம பூஷண் மம்மூட்டி

கருப்பு பல்சர் டிரைலர்!

தென் மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT