உயிரிழந்த அட்ரியானா நியாகோ  
தற்போதைய செய்திகள்

உரிமையாளர் மர்ம மரணம்! உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்!

ருமேனியாவில் உயிரிழந்த உரிமையாளரின் உடலை வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டதைப் பற்றி..

DIN

ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன.

ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா நியாகோ (வயது 34) என்ற பெண் தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். தனியாக வசித்து வந்த அவரை கடந்த சில நாள்களாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களது அழைப்புகளுக்கு அட்ரியானா பதிலளிக்காததினால், வருத்தமடைந்த குடும்பத்தினர் தலைநகர் புக்கரெஸ்டிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ருமேனிய காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அட்ரியானா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதையும் படிக்க: 3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!

மேலும், அட்ரியானாவின் பாதி உடலை அவரது 2 வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் அங்கு வன்முறை எதுவும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் உடற்கூராய்வின் அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இதேபோல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா நாட்டில் வயது மூப்பினால் உயிரிழந்த 67 வயது மூதாட்டியின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டது பல வாரங்கள் கழித்தே காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT