உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் 
தற்போதைய செய்திகள்

பிரபல மருத்துவர் கே.எம். செரியன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கலில் தெரிவித்துள்ளார்.

DIN

புதுதில்லி: உலக புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற இதய நோய் நிபுணரான மருத்துவர் கே.எம். செரியன், பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போது மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு காலமானார்.

சமீபத்தில் அவர் கேரளத்தில் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார். அவரது பல பெருமைகளில், நாட்டில் ஒரு நோயாளிக்கு அவர் செய்த முதல் இதய-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மேடி தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான கே.எம்.செரியன் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதய மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் மகத்தானது.நினைவுச் சின்னமாக இருக்கும்.

பல உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் உதவும்.

தொழில்நுட்பம் மற்றும் புதுமை மீதான அவரது முக்கியத்துவம் எப்போதும் தனித்து நிற்கும் என்று மோடி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT