தற்போதைய செய்திகள்

பூவா தலையா நடிகர்கள் நடிக்கும் புதிய தொடர்!

பூங்கொடி தொடரின் முன்னோட்டக் காட்சி...

DIN

பூவா தலையா தொடர் நடிகர்கள் நடிக்கும் புதிய சீரியளான பூங்கொடி தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கின்றன.

அக்கா - தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு 2023 பிப். 27-ல் தொடங்கப்பட்ட மலர் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதால் இத்தொடருக்கு பதிலாக புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் பாண்டி கமல் - ஸ்வேதா ஆகியோர் நடிக்கின்றனர். இத்தொடருக்கு பூங்கொடி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இத்தொடரில் எதிர்நீச்சல் சீரியல் ஜான்சிராணி பாத்திரத்தில் நடித்த காயத்ரி மற்றும் கரிகாலன் பாத்திரத்தில் நடித்த விமல் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இத்தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பூங்கொடி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் பாண்டி கமல் மற்றும் ஸ்வேதா, பூவா தலையா தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்கள்.

நாதஸ்வரம் தொடரில் பாண்டி பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பாண்டி கமல். இவர் முள்ளும் மலரும், மாப்பிள்ளை, கார்த்திகைப் பெண்கள், கல்யாணப் பரிசு உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், பூங்கொடி தொடர் வரும் பிப். 3 முதல் பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT