கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

சோதனைச் சாவடி மீது தாக்குதல்! ஒரு வீரர் பலி..5 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளதைப் பற்றி...

DIN

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பண்ணு மாவட்டத்தின் பரண் அணைப் பகுதியில் அமைந்துள்ள எல்லைப்புற கான்ஸ்டபுலரி சோதனைச் சாவடியின் மீது நேற்று (ஜன.28) இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதையும் படிக்க: மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார அமைப்பிலிருந்து ஆட்சி கவிழ்க்கப்பட்ட 3 நாடுகள் விலகல்!

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பெஷாவரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் யாரென்று தெரியாத நிலையில், தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT