தை அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் புனித நீராட குவிந்த மக்கள் 
தற்போதைய செய்திகள்

தை அமாவாசை: பூம்புகாரில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு!

மூதாதையர் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

DIN

பூம்புகார்: மூதாதையர் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளய பட்ச அமாவாசை நாள்களில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக வேதங்கள் விளக்குகின்றன.

மேலும் காவிரி கடலோடு சங்கமிக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்குச் சென்று வழிபட்டதாக காவிரி மகாமத்யம் என்ற நூல் விளக்குகிறது.

தை அமாவாசையையொட்டி புதன்கிழமை அதிகாலை முதலே தமிழகம் முழுவதுமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி கரை மற்றும் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

பூம்புகார் சங்கமத்துறையில் புனித நீராடும் பக்தர்கள்

சுமங்கலி பெண்கள் எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை காவிரியில் இட்டு வழிபட்டனர்.

பூம்புகார் கடற்கரைப் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் விஜயா தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர். அம்மாவாசை நாளான்று சங்கமத்துறையில் நீராடும் பெண் பக்தர்கள் தங்களது உடைமைகளை மாற்றிக்கொள்ள ஏதுவாக, தற்காலிக தனியறைகள் அமைக்கப்படுவது வழக்கம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்படாததால், தங்கள் உடைகளை மாற்ற பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 7-இல் நோ்காணல்

விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

கலை அவள்... மமிதா பைஜூ!

ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 20 நக்சல்கள் சரண்!

SCROLL FOR NEXT