எடப்பாடி பழனிசாமி  கோப்புப்படம்.
தற்போதைய செய்திகள்

பாலியல் வழக்கில் கைது: அதிமுக நிர்வாகி நீக்கம்!

பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகி நீக்கம்.

DIN

காஞ்சிபுரம் கீழ்படப்பை பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து பொன்னம்பலம் நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையிலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையிலும் நடந்துகொண்டுள்ளார்.

இதையும் படிக்க: சாலை மறியல்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது!

மேலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, எம். பொன்னம்பலம், (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT