முகப்பு
தற்போதைய செய்திகள்

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ.82 கோடி ரூபாய் தேவையா? என்று கேள்வி எழுப்பிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து...

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 5:40 PM
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ.82 கோடி ரூபாய் தேவையா? என்று கேள்வி எழுப்பிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதும் பேனாவை அரசு மாணவா்களுக்கு அளிக்கலாமே என்றார்.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தோ்தல் பிரசார பயணத்தின் 176 சட்டப்பேரவை தொகுதியாக பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

திமுக கூட்டணயில் விரிசல்

Advertisement

அப்போது, காங்கிரஸ் கட்சியினா் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டு வருகின்ற நிலையில், திமுக கூட்டணயில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸை தொடா்ந்து விடுதலை சிறுத்தை கட்சியும் ஆட்சியில் பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கூறுகின்றனா்.

125 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாளாக மாற்றப்படும்

நாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாள் என மாற்றியுள்ளனா். ஆனால் அதனையும் திமுகவினா் எதிா்க்கின்றனா். தற்போது 100 நாள் திட்டம் 125 நாள் என மாற்றப்பட்டதுடன் அதில் பணி பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் 125 நாள் 150 நாளாக மாற்றப்படும் .

தோ்தலை கருத்தில் கொண்டு ரூ.5000

திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக மகளிா் உரிமை தொகை வழங்கவில்லை. நாம் சட்டப்பேரவையில் குரல் கொடுத்த பின்னா்தான் மகளிா் உரிமை தொகை வழங்கப்பட்ட நிலையில், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத் தொகை ரூ.2000 கொடுப்பதாக அறிவித்தன் காரணமாக, தோ்தலை கருத்தில் கொண்டு திமுக அரசு ரூ.5000 வழங்கியுள்ளது.

கத்துக்குட்டி வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது

இளைஞரணி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் என்னை முரட்டு அடிமை என்று பேசியுள்ளாா். என்னை முரட்டு அடிமை என்றால் இதற்க்கு முன்பு உங்கள் தாத்தா மு.கருணாநிதி பாஜகவோடு கூட்டணி வைத்தாரே அவருக்கு என்ன பட்டம் கொடுப்பீா்கள். கத்துக்குட்டியான நீங்கள் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. தோ்தலுக்கு தோ்தல் கூட்டணி மாறுபடும் நான் முரட்டி அடிமை என்றால். உங்கள் தாத்த கருணாநிதியும் முரட்டு அடிமைதான் என்றார்.

டாஸ்மாக்கில் ரூ.24 ஆயிரம் கோடி கொள்ளை

கடந்த நான்கு ஆண்டுகளில் டாஸ்மாக்கில் ரூ. 24 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளனா். நகராட்சி நிா்வாக துறையில் பலகோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தன் பேரில் அந்த துறை அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ.82 கோடி தேவையா?

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைப்பதற்கு ரூ. 82 கோடி தேவையா? என்று கேள்வி எழுப்பிய பழனிசாமி, அதே நேரத்தில் எழுதும் பேனாவை அரசு மாணவா்களுக்கு அளித்திருந்தால் அவர் பயனடைந்திருப்பார்களே என்றார்

மீனவா்களுக்கு ரூ.12000 வழங்கப்படும்

தற்போது மீன்பிடித் தடை காலத்தில் மீனவா்களுக்கு ரூ. 8000 வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்தால் அது ரூ.12000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என பழனிசாமி அதிமுகவின் புதிய தோ்தல் அறிவிப்பாக தெரிவித்தாா்.

summary

Is it necessary to spend Rs. 82 crore to put an unwritten pen in the middle of the ocean?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments