செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் - கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: மா. சுப்பிரமணியன்

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக...

DIN

மருத்துவப் படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் உள் இட ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும்.

இந்தத் தீர்ப்பில் அதாவது, எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடுகள் செல்லும் என்றும், வசிப்பிடம் ரீதியாக மாநிலத்தில் வாழ்பவர்களுக்கும் பிறந்தவர்களுக்கும் குறிப்பிட்ட எந்த ஒதுக்கீடும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: காந்தி நினைவு நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ கட்டமைப்பு அதிகமாக இருக்கின்றது. மேலும் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையும் அதிகமாக உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல், இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT