சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே ஜன. 25 அன்று காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்கள் சென்ற காரை நடுரோட்டில் நிறுத்தி இளைஞர்கள் மிரட்டியதும், பெண்கள் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாகச் சென்றுள்ளனர். உடனே இளைஞர்களும் மற்றொரு காரில் சென்று பெண்களை அவர்கள் வீடு வரை துரத்திச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | பட்ஜெட்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!
இந்நிலையில் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கானத்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞர்களை கைது செய்ய பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் முதலில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைத்து இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.