ஆன்லைன் மோசடியில் 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது!
நேபாளத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
நேபாளத்தில் சட்டவிரோதமான கிரிப்டோகரன்சி பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாள காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்கு மற்றும் டிஜிட்டல் சேமிப்புகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இந்தியாவின் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் குமார் (வயது 27) மற்றும் முன்னா குமார் (36) உள்ளிட்ட 7 பேரை இன்று (ஜன.31) கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இந்த குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கணினிகள், 13 செல்போன்கள், மக்களுக்கு அவர்கள் வழங்கிய 19 காசோலைகள் மற்றும் ரூ.5,50,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அமெரிக்க பணியைத் துறந்து நாடு திரும்புமாறு குடிமக்களுக்கு கொலம்பியா அதிபர் அழைப்பு!
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரும் ஒருங்கிணைந்து மக்களிடம் பேசி அவர்களை சட்டவிரோதமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
மேலும், சமூக வலைதளங்கள் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு ஆன்லைனில் வீட்டில் இருந்தப்படியே வேலை எனக் கூறி ஏமாற்றியதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.