திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா சந்திப்பு  
தற்போதைய செய்திகள்

திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா!

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா சந்திப்பு தொடர்பாக....

DIN

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இன்று சந்தித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

தவெக தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திய பிறகு இன்று அக்கட்சியில் இணைந்தார்.

இதையும் படிக்க: தவெகவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு முக்கிய பதவி!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தவெகவின் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமியுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்து தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்த நிலையில், திருமாவளவனை சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: விதிமீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிப்பு

கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தின போட்டி

"ஆபரேஷன் சிந்தூர்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயம்தானா?' என்ற கேள்வி குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

மக்களாட்சியின் தாய் இந்தியா!

SCROLL FOR NEXT