’பறந்து போ’ திரைப்படத்தின் போஸ்டர் 
தற்போதைய செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதைப் பற்றி...

DIN

இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ’பறந்து போ’ திரைப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் ’பறந்து போ’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நடிகை அஞ்சலி, கும்பலங்கி நைட்ஸ் திரைப்பட நடிகை கிரேஸ் ஆண்டனி, நடிகர் அஜு வர்கீஸ், பாடகர் விஜய் ஜேசுதாஸ் மற்றும் மாஸ்டர் மிதூல் ரயான் ஆகியோரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: யார் தங்கமான மனிதர்? பொன்மான் - திரைவிமர்சனம்!

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் தற்போது நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.

முன்னதாக, இயக்குநர் ராமின் பேரன்பு மற்றும் வருகின்ற மார்ச் மாதம் வெளியாகவுள்ள ஏழு கடல் ஏழு மலை ஆகிய திரைப்படங்கள் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT