நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் அனுராக் காஷ்யப்பின் கென்னடி!
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய “கென்னடி” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவது குறித்து..
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகி சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்ற “கென்னடி” திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் ராஹுல் பட் நாயகனாக நடித்து உருவான திரைப்படம் “கென்னடி”. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குத் தயாரான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது, சுமார் 7 நிமிட கைதட்டல்களை இப்படம் பெற்றது.
Advertisement
Advertisement
சர்வதேச அளவில் இப்படம் பாராட்டுகளைப் பெற்றாலும், இந்தியாவில் வெளியாவதற்குத் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், “கென்னடி” திரைப்படம் வரும் பிப். 20 அன்று நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் திங்கள்கிழமை (பிப். 9) வெளியிட்டுள்ளனர்.
“Kennedy”, directed by director Anurag Kashyap will be released directly on the OTT platform.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.