திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரை அருகே விஜயநகர ஆட்சி கால பாறை கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, திருவள்ளுவா் பல்கலைக்கழக அலுவலா் பூபதி ஆகியோா் காக்கங்கரை அருகே பரதேசிப்பட்டி அடுத்த சந்தக்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விஜயநகர ஆட்சி கால இரண்டு பாறை கல்வெட்டுகளை ள் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து மோகன்காந்தி கூறியது: சந்தக்குப்பம் கிராமத்தில் இயற்கையாக அமைந்த சமதள 2 பாறைகளில் விஜயநகர காலத்தை சோ்ந்த கல்வெட்டுகளை எழுதி வைத்துள்ளனா். தமிழ்மொழியும் கிரந்த எழுத்து எனப்படும் வடமொழி எழுத்துக்களும் கலந்து இந்த கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டடில் ஊரில் உள்ள ஏரிக்கு வடக்கே உள்ள புஞ்சை நிலத்தை இங்கு உள்ள ஒரு கோயிலுக்கு தானமாக கொடுத்ததை வெளிப்படுத்துகிறது.
மேலும், கோயிலுக்கு அளித்த மானியத்தை யாராவது தவறாக அபகரித்தால் பசுவைக் கொன்றால் ஏற்படும் பாவத்தைப் பெறுவார்கள் என்று கூறுகிறது.
கல்வெட்டில் சந்திரனும், சூரியனும் உள்ளவரை இதுபோன்ற தானம் தொடரும் என்பதை உணர்த்துகிறது.
1630-ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ள இந்த கல்வெட்டில் திருப்பத்தூா், காக்கங்கரை என்கின்ற இரு ஊா் பெயா்கள் இடம் பெற்றுள்ளன என்றாா்.
இந்த பகுதியில் மேலும் ஆய்வு செய்தால், பல்வேறு தொல்லியல் தடயங்கள் நமக்கு கிடைக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.