கவின் உடன் இயக்குநர் ராம் சங்கையா மற்றும் தயாரிப்பாளர்கள் படம் - எக்ஸ்
தற்போதைய செய்திகள்

தண்டட்டி இயக்குநருடன் இணையும் கவின்!

தண்டட்டி இயக்குநர் ராம் சங்கையாவின் புதிய படத்தில், நடிகர் கவின் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தண்டட்டி இயக்குநர் ராம் சங்கையாவின் புதிய படத்தில், நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதனை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட பூஜையின்போது...

இந்தப் படத்தினை தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்க உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜை இன்று நடைபெற்றது. கோயிலில் படத்தின் ஸ்கிரிப்ட்டை வைத்து பூஜை செய்து அதனை தயாரிப்பாளரும், நடிகர் கவினும் இயக்குநரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இதன் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | நாளை நடிகை சரோஜா தேவி இறுதிச் சடங்கு!

Actor Kavin has been confirmed to star in thandatti director Ram Sangaiah's new film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT