கவினின் புதிய படத்தில் சாண்டி மாஸ்டர்... 
செய்திகள்

கவினின் புதிய படத்தில் இணைந்த சாண்டி!

நடிகர் கவினின் 9 ஆவது திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் 9 ஆவது திரைப்படத்தில் நடன இயக்குநர் சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் 9 ஆவது திரைப்படம் உருவாகி வருகின்றது. இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையில் உருவாகும் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கின்றார்.

இந்த நிலையில், இந்தப் புதிய திரைப்படத்தில் நடிகரும் நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக, படக்குழுவினர் இன்று (ஜன. 17) சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, பிக்பாஸ் 3 ஆவது சீசனில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட நடிகர் கவின் மற்றும் நடன இயக்குநர் சாண்டியின் கூட்டணி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “லோகா” திரைப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

choreographer Sandy will be playing a key role in actor Kavin's 9th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜல்லிக்கட்டு: முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை! முதல்வரின் அறிவிப்பு குறித்து அமைச்சர் மூர்த்தி

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்: திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்!

எம்ஜிஆருக்கு புகழ் வணக்கம்: தவெக தலைவர் விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர் பீமண்ணா காந்த்ரே 102 வயதில் காலமானார்!

இது ஜனநாயகம் அல்ல; பண நாயகம்: சீமான்

SCROLL FOR NEXT