பிரபல மலையாள நடிகர் மோகன் லாலின் 366 ஆவது திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
துடரும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நாயகனாக நடிக்கும் 366 ஆவது திரைப்படம் உருவாகி வருகின்றது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இதுவரை பெயர் அறிவிக்கப்படாத இந்தப் புதிய படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கின்றார். மேலும், நடிகை மீரா ஜாஸ்மின் இப்படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது 366 ஆவது திரைப்படத்தில் நடிகர் மோகன் லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக, இன்று (ஜன. 29) படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, இயக்குநர் தருண் மூர்த்தி மற்றும் நடிகர் மோகன் லால் கூட்டணியில் வெளியான “துடரும்” திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.