காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் புனித நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்தனர். 
தற்போதைய செய்திகள்

ஆடி அமாவாசை: சங்கமத்துறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் நகரில் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் ஏராளமானோர் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தினமணி செய்திச் சேவை

பூம்புகார்: ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் நகரில் காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் ஏராளமானோர் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

முன்னோர்கள் நினைவாக அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் தலையாய கடமையாகும். நவீன உலகத்தில் மாதம்தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக ஐதீகம். அதிலும் குறிப்பாக தெய்வத்தோடு ஒப்பிடக்கூடிய காவிரி ஆறு குடகு மலையில் தோன்றி காவிரிபுகும் பட்டினம் என்று அழைக்கப்படுகின்ற பூம்புகாரில் வங்க கடலில் கலக்கிறது. இத்தகைய சிறப்பு பெற்ற பூம்புகார் சங்கமத்துறையில் புனித நீராடி மூதாதையர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என காவேரி மகாமத்யம் என்ற நூல் கூறுகிறது.

பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் சங்கமத் துறையில் தங்கள் முன்னோர் நினைவாக புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க மக்கள்.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் காவேரி மற்றும் கடலில் புனித நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தற்போது மேலையூர் சட்டஸ் பகுதியில் அமைந்துள்ள, காவிரி கடையணையில் இருந்து போதிய நீரை பொதுப்பணித் துறையினர் திறந்து விட்டனர். இதனால் சங்கமத்துறையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர். மேலும் காவேரி அம்மனுக்கு தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை பழம் உள்ளிட்ட மங்களப் பொருள்களை இட்டு வழிபாடு நடத்தினர்.

கூட்ட நெரிசலால் பக்தர்கள் திணறல்

வியாழக்கிழமை அதிகாலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாகனங்கள் மூலம் பூம்புகாரில் குவியத் தொடங்கினர். ஆனால் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத காரணத்தால் மேலையூர் முதல் பூம்புகார் வரை கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகன நெரிசலில் பக்தர்கள் மற்றும் மக்கள் சிக்கிக்கொண்டனர். மேலும் காவிரி சங்கமத்துறையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

On the occasion of Aadi Amavasai, a large number of people took a holy dip at the confluence of the Cauvery River and the sea in Poompuhar city and offered prayers to their departed ancestors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

மண் அல்ல, பொன்!

SCROLL FOR NEXT