மாசி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த மக்கள்.
மாசி மாத மறைநிலா அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கனக்கான மக்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து அக்னி தீர்த்தக் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிவராத்திரி, சுவாமி, அம்பாள் தேரோட்டம் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, இன்று மறைநில அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனர்.
தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தக் கடலில் நீராடினர்.
இதனைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறையினர் விரிவாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூடுதல் பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர்.
Masi Amavasai Offering offerings to ancestors and worshipping them
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.