பியூஷ் கோயல். 
தற்போதைய செய்திகள்

5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.

DIN

புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி செல்கிறார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தை (ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை) ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.

இந்த பயணத்தின் முதல் கட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் சென்றுள்ள பியூஷ் கோயல், ​​அந்நாட்டுப் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எரிக் லோம்பார்ட், அந்நாட்டு வர்த்தக அமைச்சர் லாரன்ட் செயிண்ட்-மார்ட்டின் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இந்திய-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வர்த்தக - முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

இதற்கு இடையே பாரீஸில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். அமெரிக்கா, சிங்கப்பூா், சவுதி அரேபியா, தென்கொரியா, நைஜீரியா, பிரேசில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சா்களையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இந்தப் பயணம் ஐரோப்பிய நாடுகளுடனான வா்த்தக ரீதியிலான இந்தியாவின் நல்லுறவுக்கு மேலும் உத்வேகமளிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பயணத்தைத் தொடா்ந்து, இத்தாலிக்கு அவர் செல்லவுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுடன் வா்த்தக ரீதியிலான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்த பயணம் மேலும் உத்வேகமளிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT