புது தில்லி: ஆசிய வளா்ச்சி வங்கி தலைவா் மசாடோ காண்டாவை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான மாற்றம், எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது எனவும் இந்தப் பயணத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,
மசாடோ காண்டாவுடன் ஒரு அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. அதில் நாங்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள விரைவான மாற்றம், எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இந்தப் பயணத்தில் மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி- மசாடோ காண்டா சந்திப்பைத் தொடர்ந்து, மசாடோ காண்டா எக்ஸ் தள பதிவில்,
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாகும் இந்தியாவின் லட்சியத்தை ஆசிய வளா்ச்சி வங்கி ஆதரிக்கிறது. இது ஒரு துணிச்சலான தொலைநோக்குப் பாா்வை.
2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்தை ஆதரிக்கவும், அதன் 140 கோடி மக்களுக்கு நிலையான வளா்ச்சியை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதன்படி, நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவாக்கம், புதிய விரைவு போக்குவரத்து வழித்தடங்கள் உருவாக்குதல் மற்றும் நகர சேவைகளின் நவீனமயமாக்குதல் ஆகியவற்றுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.85,000 கோடி (1,000 கோடி டாலா்) வழங்கும் என்று மசாடோ காண்டா அறிவித்தாா்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.