ஆலங்குளத்தில் நள்ளிரவில் மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன் கோட்டையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சார்பில் ஆலங்குளத்தில் கடந்த மே 1 ஆம் தேதி புதிதாக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு 4 தினங்களே உள்ள நிலையில் விநாயகர் கோயிலில் பந்தலிட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோயில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
காலையில் பக்தர்கள் வழிபாடு செய்ய வந்த பின்னரே சிலை சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.