கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

நெல்லை, பொதிகை ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படாது!

நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முடிவு ரத்து.

DIN

நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நெல்லை, பொதிகை, சேரன் உள்ளிட்ட விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தது.

இதன்படி, நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை 8ல் இருந்து 7 ஆகக் குறைத்து ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை 5ல் இருந்து 6 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் ரயில்வே கூறியிருந்தது.

இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் மட்டும் இந்த முடிவை கைவிடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேரன், நீலகிரி, மங்களூரு, திருவனந்தபுரம் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படும் என்பதில் மாற்றமில்லை என கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT