இளையராஜாவுடன் அண்ணாமலை X / annamalai
தற்போதைய செய்திகள்

அவரது இசையே அருமருந்து: இளையராஜாவை சந்தித்தது பற்றி அண்ணாமலை!

கோவையில் இளையராஜாவுடன் அண்ணாமலை சந்திப்பு பற்றி...

DIN

கோவையில் இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக இளையராஜா இன்று காலை கோவை வந்துள்ளார்.

தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள இளையராஜாவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார்.

பின்னர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

"கோவையில், இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இசைஞானியின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும் அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதைவிட மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப்போகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT