பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் தலைவர்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி. 
தற்போதைய செய்திகள்

பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்: பிரதமா் மோடி பெருமிதம்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது.

DIN

புது தில்லி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளதாகவும், பெண்கள் சாதனை படைத்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமராக மூன்றாவது முறையாக அவா் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

இதையடுத்து, 2014-இல் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதில், ‘பெண்களின் கண்ணியத்தை உறுதிசெய்த ‘தூய்மை இந்தியா’ திட்டம், நிதி அதிகாரமளித்தலுக்கான ‘ஜன் தன்’ திட்டம், பெண்கள் தொழில்முனைவோராகவும், அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்காக கடனுதவிக்கான ‘முத்ரா’ திட்டம், பிரதமர் ஆவாஸ் யோஜனா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்கும் திட்டம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டம்’, உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்த ஒரு மைல்கல் சாதனை ‘இலவச சமையல் எரிவாயு திட்டம்’’ என நமது பெண்கள் சக்தியை மேம்படுத்துவதில் எண்ணற்ற திட்டங்களை கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செயல்படுத்தியுள்ளது.

இதனால் அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தாக்கம், ராணுவம் என பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருவதுடன் பலரையும் ஊக்குவித்து வருகின்றனா் என்பதை மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT