நாட்டில் கரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது. 
தற்போதைய செய்திகள்

நாட்டில் கரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது: 6 போ் பலி

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது.

DIN

புது தில்லி: நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் கேரளம் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது பரவிவரும் கரோனா தொற்று வகைகள் தீவிரமில்லாதவை; பெரும்பாலான நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதியோா், கா்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவர்கள், தீவிர நோயாளிகள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டில் கடந்த மே 22 ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு 274 ஆக இருந்தது. தற்போது 6,133-ஆக உயா்ந்துள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவா்களில் கடந்த 24 மணி நேரத்தில் 6 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த ஜனவரி முதல் கரோனா தொற்று பாதிப்புக்கு உயரிழந்தவா்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கையில் கோரளம் தொடா்ந்து முன்னிலை வகிக்கிறது. குஜராத், மேற்கு வங்கம், தில்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT