ஏர் இந்தியாவின் 787 - 8 ட்ரீம்லைனர் 
தற்போதைய செய்திகள்

வெற்றிகரமான மாடல் 787 - 8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது எப்படி?

ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய ட்ரீம் லைனர் விமானம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத் தயாரிப்பில் பிரபலமான போயிங் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது ரக விமானங்களை வல்லுநர்களின் ஆலோசனையுடன் உருவாக்கி வருகிறது. அதில், மிக வெற்றிகரமான விமான மாடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது போயிங் 787 - 8 ட்ரீம்லைனர் விமானம்.

உலகளவில் பல முன்னணி விமான சேவை நிறுவனங்கள் தொலைதூர பயணங்களுக்கு இந்த வகை விமானத்தையே அதிகம் பயன்படுத்துகின்றன. உலகில் 500-க்கும் மேற்பட்ட ட்ரிம்லைனர் விமானங்கள் சேவையில் உள்ளன.

மேம்பட்ட எரிபொருள் திறன், தொழில்நுட்ப அமைப்புகள், காற்று மாசுபடுதலைக் குறைப்பதற்கான சுற்றுச்சூழல் கவனம் என 787 - 8 ட்ரீம்லைனர் பல விஷயங்களிலும் நற்பெயர் கொண்ட விமான ரகமாகவே பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, 6,000 அடி உயரத்தில் பறக்கும்போது, அழுத்தத்தால் உடல்நல பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேம்பட்ட விமானவியல் அமைப்புகள் மற்றும் மின்னணு விமானக் கருவிகள் இருப்பதால் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தகவலைப் பரிமாறி ஆபத்திலிருந்து தப்பிக்கும் நடவடிக்கைகளிலும் துரிதமாகச் செயல்படும். ஒரே நேரத்தில் 242 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்த விமானம், 13,620 கிலோ மீட்டர் வரை பயண தூர வரம்பு கொண்டது.

2011 ஆம் ஆண்டு விமான சேவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் அதன் எரிபொருள் திறன், பயணிகளின் வசதி, புதுமையான வடிவமைப்பு ஆகியவற்றிற்காக புகழ் பெற்றிருக்கிறது.

துரதிர்ஷ்ட வசமாக, அறிமுகமான இந்த 14 ஆண்டுகளில் முதல்முறையாக ஆமதாபாத்தில் வெறும் 625 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது கட்டுபாட்டை இழந்து மிக மோசமாகத் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கிறது ட்ரீம்லைனர்.

ஆமதாபாத்தில் விபத்திற்குள்ளான போயிங் 787 - 8 ட்ரீம்லைனர்

கடந்த காலங்களில் போயிங் விமானங்கள் விபத்துகளில் சிக்கியிருந்தாலும் அதன் அட்டகாசமான உருவாக்கம் என வல்லுநர்களால் பாராட்டப்பட்ட போயிங் 787 - 8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது அதை வடிவமைத்தவர்களிடம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு துல்லியமான அம்சங்கள் இருந்தும் எப்படி இந்த விபத்து நடந்தது? விசாரணையில் விபத்திற்கான காரணம் தெரியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கும் விழி... தர்ஷா குப்தா

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

கனவே கலையாதே... ஸ்ரவந்தி சொக்கராபு

தனிமையே... ரிச்சா ஜோஷி

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

SCROLL FOR NEXT