சென்னை மாதவரத்தில் கழிவு நீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்ததில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வினோத் ராஜ் பலியானர்.  
தற்போதைய செய்திகள்

கழிவு நீர் குழாய் பள்ளத்தில் மண் சரிந்து மாநகராட்சி ஊழியர் பலி

சென்னை மாதவரத்தில் கழிவு நீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலியானர்.

DIN

சென்னை மாதவரத்தில் கழிவு நீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலியானர்.

பெருநகர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3-க்கு உள்பட்ட மூலச்சத்திரம் மீனாட்சி பாரதி கூட்டுறவு நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக தனியார் ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் ஒப்பந்த பணியாளர் மயிலாடுதுறை மாவட்டம், கீழ் மாத்தூர் பகுதியை சேர்ந்த வினோத் ராஜ் வியாழக்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கழிவு நீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதில், பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர் வினோத் ராஜ் சிக்கி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்து மாதவரம் பால்பண்ணை போலீசார்,வினோத் ராஜ் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

SCROLL FOR NEXT