பாஜவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம் 
தற்போதைய செய்திகள்

பாஜகவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம்

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) அணியின் மாநில செயலாளராக இருந்த கே.ஆர். வெங்கடேஷ் கட்சியில் நீக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

DIN

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) அணியின் மாநில செயலாளராக இருந்த கே.ஆர். வெங்கடேஷ் கட்சியில் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு மோசடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கே.ஆர். வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாஜவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) அணியின் மாநில செயலாளராக இருந்த கே.ஆர். வெங்கடேஷ் கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர், வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ். தமிழக பாஜவில் மாநில ஓபிசி அணி செயலாளராக இருந்து வந்த இவர் மீது ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணமோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டதாக அளித்த புகாரில், கே.ஆர்.வெங்கடேஷ், போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT