முகப்பு
தமிழ்நாடு

கோடைக்கால விடுமுறை நிதி இதுவரை கேள்விப்படாதது: நயினார் நகேந்திரன்

திருச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 2:23 PM
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - ஏஎன்ஐ(கோப்புப்படம்)
பகிர்:

கோடைக்கால விடுமுறை நிதி இதுவரை கேள்விப்படாதது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

ரூ. 5000 கொடுத்தது தேர்தலுக்காகதான். இது நம்ம முதல்வருக்குதான் தெரியும். எப்படி எல்லாம் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றலாம் என்பதில் முதல்வர் கைத்தேர்ந்தவர்.

நாடாளுமன்றத் தேர்தல் வந்த போதுதான் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுத்தார். ஒவ்வொரு குடும்பப் பெண்களுக்கும் ஒரு சிலருக்குதான் கொடுத்தார்.

கோடைக்கால விடுமுறை நிதி இதுவரை கேள்விப்படாதது. கோடைக்கால விடுமுறை நிதி கடந்த ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டில் வாங்கி உள்ளீர்களா. எங்கேயும் வழங்கவில்லை, இந்த முறை மட்டும் ஏன் வழங்குகிறீர்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் கொடுத்த உறுதிமொழிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

பிகாரில் பத்தாயிரம் கொடுக்கப்பட்டதுபோல, தமிழ்நாட்டில் செய்கிறார்கள்” என்றார்.

summary

Tamil Nadu BJP leader Nainar Nagendran has said that the summer vacation fund is unheard of.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.