நடிகை த்ரிஷா சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் வருகிற மார்ச் 1ஆம் தேதி மதுரையில் அரசியல் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மதுரை விமான நிலையம் அருகேயுள்ள மண்டேலா நகர் பகுதியில் இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மார்ச் 1-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ள இந்த நிகழ்வில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான முதற்கட்டப் பணிகளான முகூர்த்தக்கால் நடும் விழா பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக மூத்த நிர்வாகிகள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோ கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கின்ற தேர்தலாக அமைய உள்ளது. அதற்கான முதல் பொதுக்கூட்டம். மதுராந்தகத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டம் என்று சொல்ல முடியாது, மாநாடு என்று சொல்லலாம்.
பிரதமர் வந்து சென்ற பிறகும்கூட பொதுமக்கள் வந்தது திமுக ஆட்சிக்கு பேரிடியாக வந்தது. தொடர்ந்து நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இது கூட்டம் அல்ல மாநாடு. பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். அரசு நிகழ்ச்சியாக கூட இருக்கலாம். மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தளபதி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
கூட்டணியில் அங்கு வடிவம் உள்ளதா. 500க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கையில் 70 தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. டிஜிபியை நியமிக்காத அரசு எப்படி சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடியும். 33 லாக்அப் மரணம் நடைபெற்று உள்ளது. காலவலரே காவலரை பாலியல் சீண்டல் செய்கிறார்கள். பள்ளிகளில் கஞ்சா கிடைக்கிறது. கூட்டணி விவகாரத்தில் ராகுல் காந்தியை, கனிமொழி சமாதானம் செய்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்குமா இருக்காதா என்று கேள்விக்குறியாக உள்ளது. தவெகவுக்கு இருக்கும் கொள்கையை புத்தகம் போட்டு அந்த கொள்கைக்கு மாறானது பாஜக என்று சொல்லலாம். பேப்பரில் மட்டும் எழுதி வைத்தால் எப்படி.
41 பேர் இறந்து போனார்கள், அதற்கு தமிழக அரசும், விஜய்யும் காரணம். சேலத்தில் இப்போது ஒருவர் இறந்தார், அது அவருக்கு நல்ல சகுனம் தானே. இபிஎஸ் அறிவித்ததை அவர்களும் காப்பி அடித்திருக்கிறார்கள். கோடைக்கால விடுமுறைக்கு கூடுதலாக 2000. எந்த முதல்வரும் செய்யாத சாதனையை முதல்வர் செய்திருக்கிறார். நாங்கள் வழக்கு தொடுப்பதற்கான முகாந்திரமே இல்லை. மக்கள் வெறுக்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. அதை சமாளிப்பதற்காக கொடுக்கிறார்கள்.
தேமுதிக கூட்டணியில் இணைவது 1ஆம் தேதி பார்ப்போம் எனக் கூறினார். அப்போது நடிகை த்ரிஷா சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, என்னைப் பொறுத்த அளவில் யாருடைய மனதும் தனிப்பட்ட முறையில் புண்படக் கூடாது என்று நினைப்பவன் நான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.