முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 14 ஜூன், 2025 at 3:53 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,507 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 6,896 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 7,507 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரில் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.84 அடியிலிருந்து 114.91 அடியாக உயர்ந்துள்ளது.

நீர் இருப்பு 85.58 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →