கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 16) மிக பலத்த மழை (120 மி.மீ. - 200 மி.மீ) பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கையும், கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு (70 மி.மீ. - 110 மி.மீ.) வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 16) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

SCROLL FOR NEXT