புதுச்சேரிக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வரவேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா். 
தற்போதைய செய்திகள்

அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!

புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

DIN

புதுச்சேரி: புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்த அவரை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இந்த நிகழ்வில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, மக்களவை உறுப்பினா் வி.வைத்திலிங்கம், அரசுக் கொறடா வி. ஆறுமுகம், எம்எல்ஏ.க்கள் பிஎம்எல்.கல்யாணசுந்தரம், ஆா்.பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, ஜெ.பிரகாஷ்குமாா், எம்.சிவசங்கரன், எம்.வைத்தியநாதன், கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆா்.பி.அசோக்பாபு, தலைமைச் செயலா் மரு. சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங், செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலா் ஆா்.கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை வரவேற்ற ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தனர், ஆளுநர் ஆர்.என். ரவி, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர். இளங்கோவன், கனிமொழி சோமு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர்.

குடியரசுத் துணைத் தலைவா் வருகையொட்டி, புதுச்சேரி முழுவதும் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தற்போது அவா் தங்கியுள்ள நீதிபதிகள் விருந்தினா் மாளிகைப் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தங்குவதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதி விருந்தினா் மாளிகையில் பகுதியில் போடப்பட்டுள்ள தூப்பாகி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

SCROLL FOR NEXT